Saturday, December 14, 2013

மாணவர்களே ஜாக்கிரதை....

மாணவர்களை மனநல நோயாளிகளாய் மாற்றும் இன்றைய கல்வி முறை....



இன்றைய கல்வி முறை என்பது வெறும்  வியாபார நோக்கில் மட்டும்  தான் பயனிகின்றதே தவிர எந்த ஒரு அறிவு சார்ந்த நோக்குடன் செயல்படுவதாக தெரியவில்லை.ஏன் என்றால் இன்றைய காலகட்டங்களில்  கல்வி கொள்ளையர்கள் அதிகரித்து வருகின்றார்கள். UKG படிக்கும் ஒரு குழந்தைக்கு வருடதிற்கு   லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் மன்னிக்க முடியாத கல்வி கொள்ளையர்களாக  இருகின்றார்கள்.இதை பெற்றோர்களும் ஆதரிப்பது தான் கண்மூடித் தனமாக  உள்ளது.அடிப்படை உரிமையான கல்வியினை கூட சந்தையில் விற்கும் சந்தை பொருளாக மாற்றிவிட்ட கல்வி கொள்ளையர்கள்,இலவச கல்வி முறையினை முற்றிலும் அழித்து கல்வி சந்தைக்கு கடத்துகின்றார்கள்.....
சிந்தியுங்கள் பெற்றோர்களே,சிந்தியுங்கள்...

என்றும் மக்கட் பணியில் கலாம்பாக்கம் க.வினோத் குமார் ,BA.,BL...

தகவல் அறியும் உரிமை சட்டம் ...

 தகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்....

 


தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) என்பதை பல பேர் கேள்வி பட்டிருப்பீர்கள். RTI என்பது 2005 ல் இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட சட்டம். இந்த சட்டத்தினால் அரசாங்கத்தை பற்றியோ, அரசாங்க அதிகாரிகளை பற்றியோ ஏதேனும் தகவல் தெரிய வேண்டுமெனில் நீதிமன்றத்தை அணுகி பெற்று கொள்ளலாம். இதில் சில விதி விலக்குகளும், வரம்புகள்  உள்ளன. 



இந்த சட்டத்தை பற்றிய விழிப்புணர்வை அனைவரையும் சென்றடையும் நோக்கில் இந்திய அரசு ஆன்லைன் பயிற்சிகள் கொடுத்து அதற்கான சான்றிதழும் வழங்குகிறார்கள்.  7 நாள் மற்றும் 15 நாள் இரு வகை பயிற்சிகள் உள்ளன. இருந்தாலும் 7 நாள் பயிற்சியை முடித்த பின்னரே 15 நாள் பயிற்சியில் சேர முடியும்.

7 நாள் கோர்சில் மொத்தம் 7 பிரிவுகள் இருக்கும் ஒவ்வொரு பிரிவிலும் நான்கு கேள்விகள் கேட்கப்படும் அந்த கேள்விகளில் 3 கேள்விகளுக்கு சரியான விடையை கொடுத்தால் தான் அடுத்த பிரிவிற்கு செல்ல முடியும்.

கோர்சில் சேருவதற்கான தகுதிகள்:

    இந்திய குடிமகனாக இருத்தல் அவசியம்.
    கணினியில் இணைய இணைப்பு இருக்க வேண்டும்.
    கணினியில் பயர்பாக்ஸ், IE மற்றும் குரோம் உலாவிகளின் லேட்டஸ்ட் வெர்சன் வைத்திருக்க வேண்டும்.
    கணினியில் PDF Reader மென்பொருள் இருத்தல் அவசியம்.
    தேர்வுகள் ஆங்கிலத்தில் இருக்கும் என்பதால்  படித்து புரிந்து கொள்ளும் அளவு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.


கோர்சில் சேர்வது எப்படி :

    இந்த ஆன்லைன் கோர்ஸ்களில் சேர விரும்புபவர்கள் இந்த தளத்திற்கு சென்று Registration செய்ய வேண்டும்.
    வெற்றிகரமாக பதிவு செய்த பின்னர் உங்களுக்கென ஒரு User Id மற்றும் Password உங்கள் மெயிலுக்கு அனுப்புவார்கள்.
    அந்த விவரங்களை கொண்டு ஆன்லைன் கோர்ஸ் தளத்தில் நுழைந்து நீங்கள் கோர்ஸ் ஆரம்பித்து விடலாம்..........

என்றும் மக்கட் பணியில் கலாம்பாக்கம் க.வினோத் குமார்.BA.,BL.

Wednesday, December 11, 2013

தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு தனியாக ஒரு இணையதளம்...


தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு தனியாக ஒரு இணையதளம்

எதை எதையோ சேர் பண்றீங்க முதலில் இத பண்ணுங்க
அவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......

"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.

(http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள
புகார் சம்பந்தமாக

தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
(http://cmcell.tn.gov.in/login.php)

தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....
Chief Minister's Special Cell ,
Secretariat, Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in
தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு தனியாக ஒரு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. –

http://cmcell.tn.gov.in/

ஏழை எளிய மக்களும், சாமானியர்களும் தங்கள் அடிப்படைத் தேவைகளையும் அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் உரிய முறையில் அவர்களை சென்றடையும் வகையிலும், தங்கள் குறைகளை தெரிவித்து உரிய நிவாரணம் பெறும் நோக்கத்துடனும், முதலமைச்சரின் தனிப்பிரிவு இயங்கி வருகிறது.

தற்போது முதலமைச்சரின் தனிப்பிரிவில் நாள்தோறும் பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும், அஞ்சல் வழி, மின்னஞ்சல் மற்றும் இதர ஊடகங்கள் வாயிலாகவும் நாளொன்றுக்கு சுமார் 3000 முதல் 3500 வரை மனுக்கள் பெறப்படுகின்றன.

இம்மனுக்கள் தனிக் குறியீடுகள் மூலம் வகைப்படுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பிரிவில் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து எடுக்கப்படும் நடவடிக்கைகளினால் பொது மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

முதலமைச்சரின் தனிப்பிரிவின் மூலம் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கும் நோக்கில் முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு புதிய வலைதளத்தினை 11.8.2012 அன்று முதல்வர் துவக்கி வைத்தார்.

இவ்வலைதளத்தின் மூலம் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீதான ஒப்புகைச் சீட்டு உடனுக்குடன் மனுதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பதிவு எண்ணுடன் அனுப்பி வைக்கப்படும்.
புதிய வலைத்தளம் மூலம் பெறப்படும் மனுக்கள், அம்மனு தொடர்புடைய அலுவலகத்திற்கு கணினி மூலம் மாற்றப்பட்டு, அதன் விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும்....

என்றும் மக்கட் பணியில் கலாம்பாக்கம் க.வினோத் குமார்.....

Tuesday, December 10, 2013

உங்களுக்கு தெரியுமா?

தெரிந்த விஷயம் தெரியாத உண்மைகள்...

 

உபயோகமுள்ள தகவல்கள்:

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை.

* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருதவேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்தஅழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே “டிம்’ செய்ய வேண்டும்.

* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு “இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்’ என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

* கார்களில் செல்வோர் “சீட் பெல்ட்’ அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளிவராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் “அப்சர்வ்’செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் “சிக்னல்’ இல்லாத இடங்களிலும், மொபைலின் “கீ லாக்’ செய்யப்பட்ட நிலையிலும், ஏன் “சிம்கார்டு’ இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.

தமிழா தமிழா.....




தங்லிஸ் என்ற பெயரில் தமிழ் மொழியின் மானத்தை காற்றில் பறக்க விடும் ஒரு சில மனிதர்களை பற்றி பேசுவதற்கு கூட தமிழன் என்ற முறையிலே நான் வருத்தப்படுகின்றேன்,
“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
என்ற தமிழனின் சிறப்பை நிகழ்காலங்களில் பார்ப்பது என்பதே அரிதான ஒன்றாக மாறிவிட்டது,ஒரு தமிழனாக,தமிழை பேசுவதற்கு கூட அவனுக்கு நேரம் இல்லை.இன்று ஒவ்வொரு தமிழனும் சாயம் பூசப்பட்ட மட்பா ண்டங்கலாக தான் இருகின்றான்,தன்னுடைய இயற்கை நிறத்தை மறந்து விட்டு,பிழைப்புக்கு மாற்று வண்ணம்பூசிக்கொண்டு திரிகின்றான்.
மாற்று வண்ணம் பூசிக்கொண்டால் மாத்திரம் நீ தமிழன் இல்லை என்று கூறிவிட முடியுமா என்ன?
உன்னுடைய செயல்கள் வேண்டுமானால் ஆங்கிலத்தில் இருக்கலாம் ,உன்னுடைய சிந்தனைகள் என்றுமே தமிழில் தான் இருக்கும்,
சிந்திப்பதற்காய் மட்டும் உன்னுடைய தாய் மொழியாம் தமிழை உபயோகப்படுத்தாதே,உன்னுடைய செயல்களிலும் செயல்படுத்தி,பயன்படுத்து...
அதோடு
ஆங்கிலம் கற்பது நல்லது தான்,ஆங்கிலத்தை கற்க வேண்டாம் என்று நான் சொல்ல வில்லை,முதலில் தமிழுக்கு முதலிடம் கொடுத்து பராமரிக்க வேண்டும் என்று தான் நான் சொல்கின்றேன்.

உலகின் அனைத்து கண்டுபிடிப்புகளும் தாய் மொழியில் நிகழ்த்தப்பட்ட ஒன்று தான்,தாழ்மொழி கல்வியில் மட்டுமே நாம் தரம் உயர்த்த படுவோம்,தமிழ் படிப்போம்,தமிழ் வளர்ப்போம்,தமிழ் காப்போம்.....
(தொடர்ந்து அடுத்த பதிவுகளில் நம் தாழ்மொழியாம் தமிழை பற்றி காண்போம்)

என்றும் மக்கட் பணியில் கலாம்பாக்கம் க.வினோத் குமார் (பயிற்சி வழக்கறிஞர்,உயர் நீதி மன்றம் சென்னை)....


Maintained By Techmarketworld