Wednesday, November 27, 2013

அண்ணல் அவர்களும் போராட்டமும்....

அண்ணல் அம்பேத்கரின் மறைக்க பட்ட உண்மைகள்....

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது,நேரம் ஒதுக்கி வாசித்து தான் பாருங்களேன்....

 மகத் நகரசபையில் செளதார் குளத்தைப் பயன்படுத்தும் உரிமை தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உண்டு என்று தீர்மானம் நிறைவேற்றிய பின்பும் சாதி இந்துக்களின் தூண்டுதலாலும், மிரட்டலாலும் அது நடைபெறாமல் இருக்கவே அம்பேத்கரின் தலைமையில் 1927 மார்ச் 20-ல் செளதார் குளத்தில் நீர் அருந்தும் போராட்டம் நடந்தது . இந்தப் போராட்டக் காட்சி, காந்தியாரின் தண்டி உப்பு யாத்திரைக்கு ஒப்பானது. ஆனால் இதுவரையிலும் இந்த செளதார் குளம் போராட்டக் காட்சிகள் இந்தியர்களின் மத்தியில் தண்டி யாத்திரைபோல் பிரபலமாகாதது ஏன் என்றும் தெரியவில்லை..
இதற்கு எல்லாம் ஒரே கரணம் என்னவென்றால் அண்ணல் அம்பேத்கர் என்பவர் தாழ்தப்பட்ட இனத்தை சார்ந்தவர் என்பதேயாகும்.அதை தவிர வேறு எந்த காரணத்தையும் கூற முடியாது.இது போன்ற அண்ணல் அம்பேத்கரின்  அனேக சிறப்புவாய்ந்த சாதிய எதிர்ப்பு போரட்டங்கள் நடந்திருந்தாலும்  அதை ஒரு பொருட்டாக உயர் வகுப்பினர்  எடுத்துக்கொள்ளவில்லை என்பது ஒரு புறம் இருக்க அண்ணலின் போரட்டங்கள் காந்தியின் போரட்டங்களை  போல பிரபலமாக்கப் படவில்லை,இதற்கு எல்லாம் ஒரே காரணம் அண்ணல் அவர்கள் தாழ்த்தப்பட்டவர் என்பதே,அனைவராலும் ஒப்புகொள்ளபடவேண்டிய உண்மையும் ஆகும்.காந்தியடிகள் நடத்திய அனைத்து போராட்டங்களும் இன்றளவும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தொடக்க பள்ளியிலிருந்தே கர்பிக்கப்படுகின்றது ,உதரணமாக  காந்தியின்  ஒத்துழையாமை இயக்கம் ,வெள்ளையனே வெளியேறு இயக்கம் ,உப்பின் மீது உள்ள வரியை தளர்த்த காந்தி மேற்கொண்ட   மிக பெரும் புரட்சியான  தண்டி யாத்திரை போன்ற பல்வேறு காந்திய  போரட்டங்கள் இன்றளவும் இந்திய தொடக்க கல்வி நிலையங்களிலும் ,இடை நிலை கல்விநிலையங்களிலும் ,உயர்  நிலை கல்விநிலையங்களிலும்,கல்லுரிகளிலும்   இன்றளவும் கட்டாய பாடங்களாக கர்பிக்கப்படுகின்றது.பல வெளிநாட்டு கல்வியகங்களிலும் கூட கர்பிக்கபடுகின்றது , அனால் அண்ணலின் எத்தைனையோ போரட்டங்கள் உதரணமாக செளகார் குளத்தில் நீர் அருந்த வேண்டி அம்பேத்கர் நடத்தியிருக்கும் போராட்டமும், கோவில் நுழைவு போராட்டமும், தாழ்த்தப்பட்டோருக்கு அரசியல், வாழ்வியல் உரிமைகள் கேட்டு போராடிய அம்பேத்கரின் மிக நீண்ட அரசியல் வாழ்க்கையும் மிக மிக நன்கு திட்டமிட்டு நம்மைப் போன்ற இளைய தலைமுறைகளிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது.இதற்கெல்லாம் காரணம் தான் என்ன ?தாழ்தப்பட்ட மக்கள் அப்படி என்ன பாவம் செய்தவர்கள் ,தன்னுடைய உரிமையை தனே கேட்டார்கள் ,தாழ்த்தப்பட்ட மக்கள் இயன்றதை  செய்தாலும் தவறு ,இயன்றதை சொன்னாலும் தவறு,இயன்றதை கேட்டாலும் தவறு, இப்படி நாம் சொல்லும் எல்லாவற்றையும் தவறு தவறு என்று மட்டப்படுத்துகின்றார்களே தவிர நம்மை உக்குவிப்பது கிடையாது.அது மற்றவர்களின் நன்மைக்கு ஏதுவானதாக இருந்தாலும் சரி மறுக்கபடுமே தவிர எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா து . தண்டி யாத்திரையை 6-ம் வகுப்பிலேயே சொல்லிக் கொடுத்த ஆட்சியாளர்கள் இந்த செளகார் குளம் விஷயத்தை ஏன் சொல்லித் தருவதில்லை..? சைமன் கமிஷனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தை இந்திய மக்களே எதிர்த்ததாக பொய்ப் பிரச்சாரம் செய்து நமது புத்தியில் புகுத்தியது ஏன்..? சைமன் கமிஷன் முன்பும், வட்ட மேசை மாநாட்டில் காந்தியாரின் முன்பாகவே தாழ்த்தப்பட்டோருக்கான ஒரே பிரதிநிதி நான்தான் என்ற உண்மையை முழங்கியிருக்கும் அம்பேத்கரின் உண்மைப் பேச்சை நம்மிடமிருந்து மறைத்தது ஏன்..? இப்படி நேற்றைய, இன்றைய என  ஆட்சியாளர்களிடம் நாம் கேட்க வேண்டியவை  பல.

Friday, November 22, 2013

கல்வி மாற்றத்திற்கான நேரம் இது தான்.......

DDD Tution Center Kilambakkam Thiruvallur-602 025

நாங்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பயிற்சியகத்தை நடத்தி நிர்வகித்து வருகின்றோம்,இதன் படி எங்கள் கிராம மாணவர்கள் மட்டும் அல்லாது அண்டை கிராமத்தை சார்ந்த மாணவர்களுக்கும்ப கல்வி மற்றும் கல்வி சார்ந்த பயிற்சியை அள்ளித்து வருகின்றோம்.நாங்கள் 1 ஆம்  வகுப்பு முதல் 12 ஆம்  வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்வி மற்றும் சமூக ரீதியான அணைத்து உதவிகளையும் செய்து வருகின்றோம்.

சமீபத்தில் நாங்கள் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவினை மிக சிறப்பாக கொண்டாடினோம் அப்போது,எங்க பயிற்சியகத்தில் பயின்று,பள்ளி அளவிலும்,பயிற்ச்சியக அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

Maintained By Techmarketworld