Tuesday, October 28, 2014

அண்ணல் அம்பேத்கர் மறைக்கப்பட்ட உண்மைகள் ...


                        பட்டயம்
                             
         
             (  01 டிசம்பர்2012)
இந்தியா  சுதந்திரம் அடைவதற்கு முன்பே நம்முடைய இந்த சமுதாயமானது பல்வேறு சமூக வேருபாடுகளாலும் இன வேருபாடுகளாலும் சாதிய வேருபாடுகளாலும்,இந்துத்துவ  கொள்கைகளாலும் ,இந்துத்துவ சாதி  கட்டமைப்புகளாலும்  சிக்கி தவித்து கொண்டு தான் இருந்தது.அன்றைய நிலைமை தான் இன்றளவும் நிகழ்ந்துகொண்டிருகின்றது .இது போன்ற அனேக கொடுமைகள் இந்தியாவின் பல பகுதிகளில் பல ரூபங்களில் அரங்கேறி உள்ளது .இது போன்ற கொடுமைகளில் பாதிக்கப்பட்டது தாழ்த்தபட்ட சமூகத்தினரே என்பது ஒற்று கொள்ள வேண்டிய அதோடு ஒற்று கொள்ளப்பட்ட உண்மை .ஏன்  என்றல் இது போன்ற சாதிய கட்டமைப்புகள் காரணமாக தான் தாழ்த்தப்பட்ட சமுதாயம் இன்றளவும் தாழ்த்தப்பட்டு தான்  வருகின்றதே தவிர எந்தவித மாற்று முறைகளையும் பின்பற்றுவதற்கு இந்த சமுதாயமானது  முன்வரவில்லை .
 முன்பெல்லாம் அவரவர் செய்யும் வேளைக்கு ஏற்றார் போல் சமூக பார்வையில்  அவர்களின் வாழ்கை முறைகள் அமைக்கப்பட்டு வந்தது.
இதன் படி அன்று முதல் இன்றுவரை  அதே முறை தான்  பின்பற்றப்பட்டு வருகின்றது ,ஏன் என்றால்  செருப்பு தைத்தவன் மகன் செருப்பு தான் தைக்க வேண்டும்,சாக்கடையை சுத்தம் செய்தவனின்  மகன் சாக்கடையை தான் சுத்தம் செய்யவேண்டும் என்ற நிலையானது தொடரப்பட்ட ஒரு வழக்காமாக தான்  இருந்து  வருகின்றது ,இதனை மாற்றியமைக்க சிலர் முயன்றாலும் பலரால் அது முரியடிக்கப்படுகின்றது .ஏன் என்றால் உயர்தபட்டவர்கள்  மேன் மேலும் உயர்த்தபடவேண்டும் என்றும்,தாழ்த்தப்பட்டவர்கள் இன்னும் தாழ்தபடவேண்டும் என்பதும் சில ஆதிக்க  உணர்வு உடைய மாந்தருக்கு நிலையான ஒரு கொள்கையாக கற்பிக்கப் படுகின்றது.   
முன்பு தான், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இப்படிபட்ட சாதி கொடுமைகளும்,சமுதாய பிரிவுகளும் ,சமுதாய நிர்பந்தங்களும் ,சமுதாய சுரண்டல் முறைகளாலும் மிகவும் கொடூரமான முறையில் அனைவருக்கும்  இழைக்கபட்ட போதிலும் அதை எல்லாம் பொறுத்துக்கொண்டு நம்முடைய முன்னோர்கள் நமக்கு இந்த அடிமை பூமியை சாதிவேறுபாட்டை ஒழிக்காமல் அப்படியே கொடுத்து நம்மையும் அந்த சாதீய  பிரிவுகளை அனுபவிப்பதற்கு நம்மை தயாற்படுத்தினார்களே தவிர அதை எப்படி மேற்கொள்ளுவது என்பது பற்றி எந்த வித முன்னேற்பாடுகளும்  நமக்கு சரியான முறையில் நமக்கு தெளிவு படுத்தவில்லை ,இதன் காரணமாகவே நாம் இன்றும் பல்வேறு அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றோம்.  தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களை காக்கும் வகையில் எத்தனயோ தாழ்த்தப்பட்ட தலைவர்கள் போராடினாலும் அந்த சம வாழ்வுரிமை  
முழக்கங்கலானது பல்வேறு ஆதிக்க உணர்வு கொண்ட பல பேரின் முயற்சியால் பல கட்டங்களில் முறியடிக்க பட்டது.
இப்படி பல போரட்டங்களுக்கு பிறகும்  பல இன்னல்களுக்கு பிறகும் நம்முடைய உரிமைகளை மீட்டெடுப்பதற்கு  பல தாழ்த்தப்பட்ட தலைவர்கள் நம்மிடையே உருவனாலும்  அவர்களையும் தன்னுடைய ஆதிக்க முரையால் உருகுலைத்து இருகின்றார்கள் அப்போதைய சாதீய கொளைககார்கள்.
அப்படி ஆதிக்க சக்தியை எதிர்த்து போராடிய தலைவர்களில் ஓர் ஒப்பற்ற தலைவர் தான் அண்ணல் பாரதரத்னா டாக்டர் பீமா ராவ் இராம்ஜி அம்பேத்கர்.M.A.,M.A.LLM,M.L.,D.LL.,M.Phil.,Phd.இவர் தாழ்த்தப்பட்ட சமுதாய சாதிய கட்டமைப்பில் தோன்றிய முதல் மற்றும் ஒரேயொரு வழக்கறிஞர்  இவரே என்பது குறிப்பிட தக்கது. இத்தனை படிப்புகளை படித்திருக்கும் முதல் இந்தியர் அம்பேத்கர் என்பதும், அந்த முதல் இந்தியரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்தான் என்பதும் நமக்குப் பெருமையான விஷயம்தான்.

கல்விக்கு இந்த மாமனிதர் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை விவரிக்க இயலாத ஒன்று என்று தான் சொல்லவேண்டும் . 17 வயதில் ராமாபாயை திருமணம் செய்து முடித்த கையோடு வெளிநாட்டுக்கு  சென்று படிப்பில் முழு கவனத்தையும் செலுத்திய அந்த மாமனிதரை என்னவென்று வர்ணிப்பது .பரோடா மன்னரின் உதவியுடன்  படிக்க சென்ற இந்த மாமனிதர்  இந்திய பிரஜை  என்ற முறையில் அனேக ஏலனபேச்சிற்கும்  ,அவமானங்களுக்கும் உள்ளானார்.இருந்த போதிலும் தன்னுடைய இடை விடாத முயற்சியாலும் ,அயராத உழைப்பினாலும் தன்னுடைய மேற் படிப்பை வெற்றிகரமாய் முடித்தார்.  

நாடு திரும்பியவுடன் பரோடா மன்னரின் சமஸ்தானத்திலேயே கணக்கு பார்க்கும் வேலைக்கு அமர்கிறார். அங்கே அவர் சந்திக்கும் அவமானங்கள் சாதிய எதிர்ப்பு போரட்டத்திற்கும்,தம் தாழ்த்தப்பட்ட மக்களின் மீட்புக்காகவும் போராட ஒரு துண்டுதலை உண்டுபண்ணியது .தன் கீழே வேலை பார்ப்பவராக இருந்தாலும் ஒரு டம்ளர் தண்ணியை கொண்டு வந்து கொடுக்க மனம் இடம் கொடுக்காத அளவுக்கு சாதிப் பித்துப் பிடித்த இந்தியர்கள் மத்தியில் எத்தனை நாட்கள்தான் அம்பேத்காரால் பணியாற்றியிருக்க முடியும்.. இது குறித்து பரோடா மன்னருடன் அம்பேத்கர் பேசும்போது மன்னர் இவ்வளவுதான் என்னால் முடியும்.. என்று சொல்வது அப்போதைய இந்திய அரசியல் சூழலை தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும்போதும் இதே போன்ற சூழலை அவர் எதிர்கொள்ளும் நிலைமை என்பது அப்போதைய ஆதிக்க உணர்வின் ஆதிக்கத்தை நம்மால் உணர முடிகின்றது..அங்கு  நீர் அருந்தவிடாமல் தடுத்ததையும் எதிர்த்து தனது தாகத்தைத் தீர்த்துவிட்டு, “வேண்டும்  என்றால்   நீங்க வரும்போது உங்க வீட்டில்  இருந்தே தண்ணீர்  கொண்டு வாங்க ..” என்று அம்பேத்கர் சொல்லும் இந்த வார்த்தையானது அப்போதைய நம்முடைய நிலையை தெளிவாக எடுத்துரைகின்றது ..

நன்கு படித்து, நல்ல வேலையில் இருக்கும் தனக்கே இத்தனை இடர்ப்பாடுகளும், சோதனைகளும் கிடைக்கின்றபோது படிப்பறிவில்லாத ஏழையும் தம்மை போன்ற  தாழ்த்தப்பட்ட மக்கள் என்னென்ன சோதனைகளை தினம்தோறும் சந்தித்து வருவார்கள் என்று அவர் சிந்தித்த வேளையினால்தான் இன்றைக்கு இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர் என்ற பிரிவினரின் செயல்பாடுகள் ஓரளவுக்கேனும் உயர்ந்திருக்கிறது.

சைமன் கமிஷனை காங்கிரஸ் புறக்கணித்தபோதிலும் அம்பேத்கர் அங்கு ஆஜராகி தான் சார்ந்த மக்களுக்காக வாதிடுவது என்பது நம்முடைய  உரிமையை நிலை நாட்டுவது என்பதும் அண்ணலின் பண்பை நமக்கு உணர்த்துகின்றது..

மகத் நகரசபையில் செளதார் குளத்தைப் பயன்படுத்தும் உரிமை தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உண்டு என்று தீர்மானம் நிறைவேற்றிய பின்பும் சாதி இந்துக்களின் தூண்டுதலாலும், மிரட்டலாலும் அது நடைபெறாமல் இருக்கவே அம்பேத்கரின் தலைமையில் 1927 மார்ச் 20-ல் செளதார் குளத்தில் நீர் அருந்தும் போராட்டம் நடந்தது . இந்தப் போராட்டக் காட்சி, காந்தியாரின் தண்டி உப்பு யாத்திரைக்கு ஒப்பானது. ஆனால் இதுவரையிலும் இந்த செளதார் குளம் போராட்டக் காட்சிகள் இந்தியர்களின் மத்தியில் தண்டி யாத்திரைபோல் பிரபலமாகாதது ஏன் என்றும் தெரியவில்லை..
இதற்கு எல்லாம் ஒரே கரணம் என்னவென்றால் அண்ணல் அம்பேத்கர் என்பவர் தாழ்தப்பட்ட இனத்தை சார்ந்தவர் என்பதேயாகும்.அதை தவிர வேறு எந்த காரணத்தையும் கூற முடியாது.இது போன்ற அண்ணல் அம்பேத்கரின்  அனேக சிறப்புவாய்ந்த சாதிய எதிர்ப்பு போரட்டங்கள் நடந்திருந்தாலும்  அதை ஒரு பொருட்டாக உயர் வகுப்பினர்  எடுத்துக்கொள்ளவில்லை என்பது ஒரு புறம் இருக்க அண்ணலின் போரட்டங்கள் காந்தியின் போரட்டங்களை  போல பிரபலமாக்கப் படவில்லை,இதற்கு எல்லாம் ஒரே காரணம் அண்ணல் அவர்கள் தாழ்த்தப்பட்டவர் என்பதே,அனைவராலும் ஒப்புகொள்ளபடவேண்டிய உண்மையும் ஆகும்.காந்தியடிகள் நடத்திய அனைத்து போராட்டங்களும் இன்றளவும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தொடக்க பள்ளியிலிருந்தே கர்பிக்கப்படுகின்றது ,உதரணமாக  காந்தியின்  ஒத்துழையாமை இயக்கம் ,வெள்ளையனே வெளியேறு இயக்கம் ,உப்பின் மீது உள்ள வரியை தளர்த்த காந்தி மேற்கொண்ட   மிக பெரும் புரட்சியான  தண்டி யாத்திரை போன்ற பல்வேறு காந்திய  போரட்டங்கள் இன்றளவும் இந்திய தொடக்க கல்வி நிலையங்களிலும் ,இடை நிலை கல்விநிலையங்களிலும் ,உயர்  நிலை கல்விநிலையங்களிலும்,கல்லுரிகளிலும்   இன்றளவும் கட்டாய பாடங்களாக கர்பிக்கப்படுகின்றது.பல வெளிநாட்டு கல்வியகங்களிலும் கூட கர்பிக்கபடுகின்றது , அனால் அண்ணலின் எத்தைனையோ போரட்டங்கள் உதரணமாக செளகார் குளத்தில் நீர் அருந்த வேண்டி அம்பேத்கர் நடத்தியிருக்கும் போராட்டமும், கோவில் நுழைவு போராட்டமும், தாழ்த்தப்பட்டோருக்கு அரசியல், வாழ்வியல் உரிமைகள் கேட்டு போராடிய அம்பேத்கரின் மிக நீண்ட அரசியல் வாழ்க்கையும் மிக மிக நன்கு திட்டமிட்டு நம்மைப் போன்ற இளைய தலைமுறைகளிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது.இதற்கெல்லாம் காரணம் தான் என்ன ?தாழ்தப்பட்ட மக்கள் அப்படி என்ன பாவம் செய்தவர்கள் ,தன்னுடைய உரிமையை தனே கேட்டார்கள் ,தாழ்த்தப்பட்ட மக்கள் இயன்றதை  செய்தாலும் தவறு ,இயன்றதை சொன்னாலும் தவறு,இயன்றதை கேட்டாலும் தவறு, இப்படி நாம் சொல்லும் எல்லாவற்றையும் தவறு தவறு என்று மட்டப்படுத்துகின்றார்களே தவிர நம்மை உக்குவிப்பது கிடையாது.அது மற்றவர்களின் நன்மைக்கு ஏதுவானதாக இருந்தாலும் சரி மறுக்கபடுமே தவிர எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா து . தண்டி யாத்திரையை 6-ம் வகுப்பிலேயே சொல்லிக் கொடுத்த ஆட்சியாளர்கள் இந்த செளகார் குளம் விஷயத்தை ஏன் சொல்லித் தருவதில்லை..? சைமன் கமிஷனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தை இந்திய மக்களே எதிர்த்ததாக பொய்ப் பிரச்சாரம் செய்து நமது புத்தியில் புகுத்தியது ஏன்..? சைமன் கமிஷன் முன்பும், வட்ட மேசை மாநாட்டில் காந்தியாரின் முன்பாகவே தாழ்த்தப்பட்டோருக்கான ஒரே பிரதிநிதி நான்தான் என்ற உண்மையை முழங்கியிருக்கும் அம்பேத்கரின் உண்மைப் பேச்சை நம்மிடமிருந்து மறைத்தது ஏன்..? இப்படி நேற்றைய, இன்றைய என  ஆட்சியாளர்களிடம் நாம் கேட்க வேண்டியவை  பல. (இப்படியாக நான் ஒரு வாசகரின் வார்த்தையை  ஒரு வலைபக்கத்தில் படித்தேன் அதை நான் உங்களிடம் சொல்வதை என் கடமையாக நினைக்கின்றேன் :அம்பேத்கர் இவ்வளவு புரட்சிகளை செய்திருக் கின்றார் என்று சொல்லுகின்றீர்களே எனக்கு கொஞ்சம் அதை அட்டவணைப்படுத்தி ,எண் கணக்கில் சொல்லமுடியுமா என்று கேட்டார் .அதற்கு என்னுடைய கருத்து என்னவென்றால் அண்ணல் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சாதகமாக எத்தனயோ போரட்டங்களை செய்திருக்கின்றார் உதாரனமாக செளதார் குளத்தில் செய்த புரட்சி,எத்தனையோ சாதீய எதிர்ப்பு போரட்டங்கள் அண்ணலின் தலைமையில் நடந்தேறியது ,இருப்பினும் அப்போதைய அரசியல் தலைவர்களாலும் அன்றைய அரசியல் சூழ்நிலைகளாலும் அப்போராட்டங்கள் நம்மிடம் இருந்து மறைக்கப்பட்டு இருக்கின்றது இதற்கு காரணம் என்ன?)

தொடர்ந்து நடக்கும் கலவரங்களும் சாதீய  சூழலும் அண்ணலை   இன்னமும் அதீத வேகத்துடன் தனது இனத்து மக்களுக்காக உழைக்க வைத்திருக்கிறது.
அண்ணல் அம்பேத்கர் நடத்திய சுதந்திரப் போராட்டம் பிரிட்டிஷ் ஆதிக்கத்திடம் இருந்து இந்தியா விடுதலை வேண்டி நடைபெற்ற போராட்டம் அல்ல.. ஆண்டாண்டு காலமாக கடவுள்கள்,தர்மம், வேதங்கள், சாதிகள் என்று இந்து மதத்தில் இருந்த குழப்பங்களை சாக்காக வைத்து ஆதிக்கச் சாதியினர் நடத்திய கொடுமையில் இருந்து தனது இனத்துச் சொந்தங்களான தாழ்த்தப்பட்ட மக்களை மீட்க அண்ணல் அவர்கள்  நடத்திய இந்த போராட்டமானது  சுதந்திரப் போராட்டமாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பது மறுக்கப்படமுடியாத கருத்தாகும்.
மதம் என்பது தன்னை பின்பற்றும் அத்தனை பேருக்கும் பாகுபாடில்லாமல் வழி காட்டக் கூடியதாகத்தான் இருக்க வேண்டும். அப்படியில்லாமல் குறிப்பிட்டவர்களை மட்டும் என்னைத்தான் தெய்வமாகத் தொழ வேண்டும். ஆனால் அருகில் வந்து தொழக் கூடாது. தூரத்தே நின்று அப்படியே போய்விட வேண்டும் என்றெல்லாம் எந்தக் கடவுளாவது சொன்னாலோ.. சொல்லியிருந்தாலோ.. அதனைத் தூக்கியெறிந்துவிட்டுப் போவதுதான் சாலச் சிறந்தது.ஏன் என்றால் மதம் என்பது ஒரு மார்கம்அப்படி ஒரு மதத்தை இவர்கள் தான் தொழ வேண்டும் இவர்களை தவிர மற்றவர்கள் தொழுதால் அது தீங்கு என்று சொல்லப்படும் மதம் என்று ஒன்று இருந்தால் அது மதமில்லை அது பிரிவினை வாத செயல் அதோடு அது உண்மையான மதமும் கிடையாது .
கொடுக்கும் பொது தான் கொடுப்பதின் நலம் தெரியும் , எரியும் பொது தான் நெருப்பின் குணம் தெரியும் அந்த வகையில் ,அடக்கி வைக்கப்படும்போதுதான் சுதந்திரத்தின் அருமை தெரியும்.. இந்த அடக்குமுறையை எதிர்த்தாக வேண்டுமெனில் ஆட்சி, அதிகாரத்துக்கு செல்வதுதான் மிகச் சிறந்த வழி என்றுணர்ந்து அதற்கான வழிமுறைகளுக்குள் அம்பேத்கர் இறங்கியபோதுதான் இந்தியாவின் விடிவெள்ளியாக இருந்த காங்கிரஸின் இன்னொரு பக்கமும் அம்பேத்கருக்கு புரிந்திருக்கிறது..
முதல் இரண்டு வட்ட மேசை மாநாடுகளிலும் அம்பேத்கர் கலந்து கொண்டு தனது இனத்து மக்களுக்காக அவர் வாதாடுவது என்பதும்  அது மட்டும் இல்லாமல் அணைத்து வட்ட மேசை மாநாடுகளிலும் கலந்துகொண்டதன் விளைவாக அண்ணல் அம்பேத்கருக்கு வட்ட மேசை கண்ட தலைவர் என்னும் பெயரும் உண்டு . அடுத்து வரும் தேர்தல்களில் தனது இனத்திற்காக இரட்டை வாக்குரிமை தேவை என்று கேட்டு போராடி வெற்றி பெற்று வந்த அம்பேத்கரை காந்தியார் தனது தந்திரமான போர்க்குணத்தால் வெற்றி கொண்டது இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி என்றே வர்ணிக்கலாம்..அவ்வாறு இரட்டை வாக்குரிமை தருவது அவர்களை இன்னமும் ஒதுக்குவது போலாகும். இந்து மதத்தை இரண்டாகப் பிரிப்பது போலாகும் என்று காந்தியார் மறுக்கிறார். அம்பேத்கரும் இதனை ஏற்க மறுக்கிறார்.
இந்தியாவில் காந்தியாருக்கு இருந்த தேசத் தந்தை என்ற பெரும் பெயரில் நிச்சயம் இது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது நாம் உணரக் கூடியதே..

இரண்டு முறை காந்தியாரை நேரில் சந்தித்து பேசும் அம்பேத்கர் இறுதியில் வேறு வழியில்லாமல் நாட்டு நலனுக்காக தனது இனத்து மக்கள் நலனை பலிகடாவாக்கும் அண்ணல் அம்பேத்கரின் இந்த விளைவு காந்தியின் முடிவால் ஏற்பட்டது தான் ,இது அண்ணலின் முடிவு அல்ல.வட்ட மேசை மாநாட்டில் வெற்றி பெற்று  தேர்தல்களில் தனது இனத்திற்காக இரட்டை வாக்குரிமை தேவை என்று கேட்டு போராடி கிடைத்த உரிமையை கைவிட வேண்டியதாயிற்று .

இதனைச் செய்துவிட்டு அம்பேத்கர் காந்தியாரிடம் தெரிவிக்கும் அந்தப் புகழ் பெற்ற ஒரு விளக்கமானது என்னவென்றால் , ""காந்திஜி, உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம்தான். ஆனால் அதை அடிக்கடி கையிலெடுக்க வேண்டாம். ஆயுதமும் மழுங்கிவிடும்"".நீங்கள் இந்த நாட்டிற்கு தேவை என்பதை அண்ணல் அவர்கள் அந்நேரத்திலே காந்தியிடம் குறிப்பிடுகின்றார்.

காந்தி அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஹரிஜன் என்று பெயர் சூட்டி அவர்கள் கடவுளின் குழந்தைகள் என்று சொல்லி, அவர்களை அரவணைத்துச் செல்லும்படி அறிவுரை கூறிய காந்தியார் அவர்களுடைய நடைமுறை வாழ்க்கையைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காதது ஏன் என்றுதான் புரியவில்லை.ஏன் என்றால் அப்போதைய நிலைமையில் தன்னுடைய  கவனத்தை முழுமையாக  இந்திய திரு நாட்டின் விடுதலைக்காக போராடி கொண்டு  இருந்தாலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் சம வாழ்வுரிமை சமுதயதிற்கான முயற்சிகளுள்  சற்று பின்னடைவுடன் செயல்பட்டது என்பது தாழ்த்தப்பட்ட சமுக மக்களின் உரிமையியலில் ஒரு மாபெரும் தாக்கத்தை இன்றளவும் ஏற்படுத்தியிருகின்றது.அன்று தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு தகுந்த முறையில் சரியான சமூகசூழ்நிலைகளை ஏற்படுத்த அன்றைய அரசியல் தலைவர்கள் அனைவரும்  முன்வந்து இருகக்கவேண்டும்,அப்படி முன் வந்து இருந்தால்            இன்றைய       தாழ்த்தப்பட்ட    சமூகமானது     பல        பிரச்சனைகளுக்கு  தீர்வை  கண்டிருக்கும்.  இதன்  காரணமாக    தான்      
இன்று பல்வேறு சாதி கட்சிகள் இந்தியாவில் முளைத்து ஜாதி ஆதிக் கங்களை செலுத்திவருகின்றது ,இது போன்ற சாதி கட்சிகள் மக்களின் ஒற்றுமையை சீரடித்து வருகின்றது.எனவே ஜாதி கட்சிகளை ஒருபோதும் நாம் எற்றுகொள்ளகூடது,அங்கீகரிக்கவும் கூடாது.


அண்ணல் அம்பேத்கரின் வாழ்கை வரலாறு 

என்றும் மக்களில் ஒருவனாய்....

1 comment:

  1. நல்ல கருத்துக்கள் நண்பரே...

    உங்கள் பதிவுகளை தொடர்ந்து எதிர்பார்கின்றோம்.
    உங்களது இந்த பணிகள் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்..

    ReplyDelete

Maintained By Techmarketworld