Wednesday, September 17, 2014

தமிழகத்தில் கந்து வட்டிச் சட்டம் நடைமுறையில் இருந்த போதும் போதிய விழிப்புணர்வு இல்லை?



தமிழகத்தில் கந்து வட்டிச் சட்டம் நடைமுறையில் இருந்த போதும் போதிய விழிப்புணர்வு இல்லை?

 

தமிழகத்தில் கந்து வட்டிச் சட்டம் என்பது நடைமுறையில் இருந்த போதும்மக்களிடம் இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கவலை தெரிவித்துள்ளார்.

கந்து வட்டிக் கொடுமை குறித்த நிகழ்வொன்றில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.இதற்கென மூத்த வழக்கறிஞர் ஒருவரையும் நீதிபதிகள் நியமித்துள்ளனர். இந்த மூத்த வழக்கறிஞர் தமது ஆய்வின் பேரில் அறிந்துக்கொண்ட கூற்றுப்படி, தமிழகத்தில் கந்து வட்டிக் கொடுமை தடுப்பு சட்டம் நடைமுறையில் இருந்த போதும்மக்களிடம் இதுக்குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை என்று தெரிவித்துள்ளார்.


இந்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த மாவட்டங்கள் மற்றும் தாலுக்கா தோறும் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் என்பதும் வழக்கறிஞரின் பரிந்துரையாக உள்ளது. இதை அறிந்துக்கொண்ட நீதிபதிகள் கந்து வட்டி வசூலிப்போர் மீது, கடுமையான நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்றும்அவர்கள் மீது குண்டர் சட்டத்தை ஏன் பாய்ச்சக் கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக ஒரு அறிக்கையை தமிழக அரசு வருகிற நவம்பர் மாதம் 5ம் திகதிக்குள் நீதிமன்றத்துக்கு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கந்து வட்டிக் கொடுமையால் தமிழகத்தில் தற்கொலை மற்றும் கொலை அதிகரித்துள்ளது என்பதே சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Maintained By Techmarketworld